உள்ளடக்கத்துக்குச் செல்

அஃப்சல் குரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஃப்சல் குரு
பிறப்புமுகம்மது அஃப்சல் குரு
Mohammed Afzal Guru
பாரமுல்லா மாவட்டம், சம்மு காசுமீர், இந்தியா
இறப்பு(2013-02-09)பெப்ரவரி 9, 2013
தில்லி, இந்தியா
நோக்கம்இந்திய நாடாளுமன்றத் தாக்குதலைத் திட்டமிட்டமை[1]
தீர்ப்பு(கள்)கொலை
சதி
இந்தியாவுகுகு எதிராகத் தாக்குதல்
வெடிபொருட்கள் வைத்திருந்தமை
தண்டனைமரணதண்டனை
தற்போதைய நிலை2013 பெப்ரவரி 9, இந்திய நேரம் காலை 8:00 மணிக்கு தூக்கிலிடப்படல்

அஃப்சல் குரு (Afzal Guru) என அறியப்படும் மொகமது அஃப்சல் 2001 திசம்பரில் இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்கிய வழக்கில் சதிக்குற்றம் சாட்டப்பட்டு உச்ச நீதி மன்றத்தால்2004ஆம் ஆண்டு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளி ஆவார். அக்டோபர் 20, 2006 அன்று நிறைவேற்றப்பட இருந்த தண்டனை குடியரசுத் தலைவருக்கு முறையிட்ட அவரது கருணை மனுவினை அடுத்து தடுத்து வைக்கப்பட்டது. பிப்ரவரி 3, 2013 அன்று இவரது கருணைமனு இந்தியக்குடியரசுத் தலைவர் நிராகரித்தார். அதனால், இவர் பிப்ரவரி 9, 2013 அன்று காலை 6.25 மணிக்கு திகார் சிறையில் திரீ ஸ்டார் நடவடிக்கை மூலம் தூக்கிலிடப்பட்டார்.[2] இவர் தூக்கிலிடப்பட்டபிறகுதான் இந்திய அரசு முறைப்படி அறிவித்தது. முன் கூட்டியே தெரிந்தால் ஏதாவது அசம்பாவிதம் நிகழக்கூடும் என அறிந்து திரீ ஸ்டார் என்ற ரகசிய நடவடிக்கையின் மூலம் தூக்கிலிட்டது.[3][4]

வழக்கு

[தொகு]

அரசு தரப்பில் எண்பது சாட்சிகளும் குற்றவாளி தரப்பில் பத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர். தீர்ப்பின் சுருக்கம்:

"பல நபர்களைக் கொன்ற இந்த நிகழ்வு, நாடு முழுமையையும் ஆட்டுவித்த ஒன்றாகும்; சமூகத்தின் ஒட்டுமொத்த மனசாட்சிக்கும் குற்றம் புரிந்தவருக்கு மரணதண்டனை வழங்கினாலே நிறைவு கிடைக்கும்."[5]

அரசுத் தரப்பு வழக்கு

[தொகு]

காசுமீர பிரிவினைவாத அமைப்புகளான லஷ்கர்-ஏ-தொய்பாவும் ஜெய்ஷ்-ஏ-மொகம்மதும் இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தின. ஒரு பெண் காவலர் உட்பட பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினர் ஏழு பேர் கொல்லப்பட்டனர்; தாக்குதல் நடத்திய, இதுவரை முழுமையாக அடையாளம் காணப்படாத, ஐந்து பேரும் கொல்லப்பட்டனர்.

தாக்கியோரின் அனைத்து முத்திரையிடாத அடையாள அட்டைகளின் பின்புறத்திலும் அஃப்சல் குருவின் நகர்பேசி எண் ஒரே கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது. மேலும் தாக்கியோரிடம் இருந்த நகர்பேசி மற்றும் சந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கூறுகளிலும் குருவின் பேச்சு வரலாறுகள் இருந்ததாகவும் அரசுத் தரப்புக் கூறியுள்ளது.

இதன்படி திசம்பர் 13, 2001 அன்று இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல்களை நிகழ்த்தும் முன்னர் குற்றவாளிகள் காசுமீரத்தில் இவருடன் தொடர்பு கொண்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இவரது ஒப்புதல் வாக்குமூலமும் பெறப்பட்டதாக வழக்கில் பதியப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Afzal Guru hanged: Curfew imposed in Kashmir valley, NH closed to avert trouble Last Rerieved 9 February 2013
  2. "அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டார்". ndtv. பார்க்கப்பட்ட நாள் 2013-02-09.
  3. "In last letter to wife, Afzal Guru named hanging code Operation Three Star". IBN 7. 12 February 2013 இம் மூலத்தில் இருந்து 12 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130212204115/http://ibnlive.in.com/news/in-last-letter-to-wife-afzal-guru-named-hanging-code-operation-three-star/372254-3-244.html. பார்த்த நாள்: 15 February 2013. 
  4. "Afzal Guru's last letter delivered to family". NewsWala. 15 February 2013 இம் மூலத்தில் இருந்து 27 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130227031516/http://www.newswala.com/India-National-News/Afzal-Gurus-last-letter-delivered-to-family-29833.html. பார்த்த நாள்: 15 February 2013. 
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2011-08-19. பார்க்கப்பட்ட நாள் 2011-08-11.

வெளியிணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அஃப்சல்_குரு&oldid=3931623" இலிருந்து மீள்விக்கப்பட்டது